கடமையில் இருக்கும் போது ஏற்படும் அவசர அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்போருக்கு வழங்கப்படும் கொடுப்பனவை தற்போதைய காலத்திற்கேற்ப மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களுக்கான நட்டஈட்டு கட்டளை சட்டம் மற்றும் புலமைசார் சொத்துரிமை சட்டமூலம் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். திடீர் அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டு தொகையை அதிகரிப்பதே நோக்கமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.