பொரளை சகல பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் அதிகொகுசு வீட்டிலிருந்து வாள்கள், துப்பாக்கிகள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிலியந்தலையில் ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரியின் வீட்டிலிருந்து இவ்வாறு 4 கைத்துப்பாக்கிகள், ரிவால்வோர் இரு வாள்கள் , ரம்போ கத்தி என்பவற்றுடன் அடையாளம் காண முடியாத துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பனாமுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர் இவ்வைத்தியர் தொடர்பில் தகவல் வெளியானது. அதற்கமைவாகவே நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.