fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உடவலவ தேசிய வனப்பூங்காவில் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதோடு நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2022 15:04

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவலவ தேசிய வனப்பூங்காவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அதிகளவான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவலவ வனப்பூங்காவில் பொக்குனதென்ன பிரதேசம் மற்றும் தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரம்பேகேம, கிரிவாடிய ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 3 கஞ்சா சேனைகள் அழிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது , கஞ்சா மற்றும் இலங்கை கட்டுத்துப்பாக்கியுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 732 கிலோ கிராம் காய்ந்த கஞ்சா அதேபோல் 3 சேனைகளில் வளர்க்கப்பட்டிருந்த 12 ஆயிரத்து 940 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 19, 2022 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க