சட்டவிரோதமான முறையில் விசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 2 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெடிகந்த வீதியின் ரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாலியல் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாவ, மித்தெனிய, ரத்மலானை, பாணந்துறை, நாரம்பலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர்களை கல்சிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இரண்டு நைஜீரிய பிரஜைகள் கைது
படிக்க 0 நிமிடங்கள்