Country | Buying | Selling | |
![]() ![]() | Dollar | 198.50 | 202.99 |
USA | |||
![]() ![]() | Pound | 273.27 | 282.08 |
UK | |||
![]() ![]() | Euro | 233.75 | 242.34 |
EU | |||
![]() ![]() | Yen | 1.79 | 1.86 |
Japan | |||
![]() ![]() | Yuan | 30.23 | 31.50 |
China | |||
![]() ![]() | Dollar | 144.54 | 150.86 |
Australia |
செலுத்தப்படவேண்டியிருந்த வெளிநாட்டு கடன் உரிய நேரத்தில் செலுத்தப்பட்டுள்ளது : மத்திய வங்கி
Related Articles
இன்றைய தினம் செலுத்தப்பட வேண்டியிருந்த கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 50 மில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு கடன் செலுத்தப்பட்டுள்ளமையானது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடனை செலுத்த முடியாத சூழல் தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் 500 மில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கபடும் நிலையில் கடன் தவணை செலுத்தப்பட்டு மக்களுக்கான உணவும், மருத்துவம் உள்ளிட்ட சகல தேவைகளும் பூர்த்தி செய்யப்படுமென நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020ம் ஆண்டில் 6.5 பில்லியன் டொலர்களை இலங்கை கடன் தொகையாக செலுத்த வேண்டியிருந்தது. கடந்த வருடத்தில் 6 பில்லியன்கள் செலுத்தப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் வெளிநாட்டு கடனை செலுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது பொருளாதார ரீதியில் நன்மை பயக்கும் விடயமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.