தனது மனைவியை பிரிவதாக நடிகர் தனுஷ் அறிவிப்பு..
Related Articles
நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஐஸ்வர்யா உடனான 18 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், குழந்தைகளுக்கு பெற்றோராகவும், பாதுகாவலர்களாகவும் ஒன்றாக பயணித்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தற்போது எங்கள் பாதை தனித்தனியாக பிரிய வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கான நேரத்திற்காக நானும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுத்து, இந்த சூழலை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.