சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை சிகரட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படையணி தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து 12 ஆயிரம் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.