சர்வதேச கிரிக்கெட் சபை டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி வீரர் பெட் கெமின்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்து அணி வீரர் கைல் ஜெமிசன் பட்டியலிடப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வீரர் வரிசையில் அவுஸ்திரேலியா அணியின் மானஸ் லபுஷேன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டும், மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் காணப்படுகின்றனர். நான்காவது இடத்தில் கேன் வில்லியம்ஸனும், ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் ரோஹிட் ஷர்மாவும் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணியின் தலைவர் விராட் கொஹ்லி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.