கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனடாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது மாகாணமான க்யூபெக்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறித்த மாகாணத்திலேயே அதிக கொரோனா உயிரிழப்புக்களும் பதிவாகின்றன. நேற்றைய தினத்தில் மாத்திரம் அங்கு 12 ஆயிரத்து 28 பேர் கொவிட் தொற்றினால் மரணித்துள்ளனர். அவ்வாறான உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தில் மாகாண சபை அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அங்கு 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் ஒரு டோஸை பெற்றுள்ளனர். எஞ்சியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்களை தடுப்பூசி வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கும் திட்டத்தின் ஒருகட்டமாகவே தடுப்பூசி பெறாதவர்களுக்கு மருத்துவ வரியை விதிக்க க்யூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் கனடாவின் க்யூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.