ஒரு தொகை சட்டவிரோத சிகரட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஹொட்டல் ஒன்றிலிருந்து குறித்த சிகரட் தொகையுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தீர்வை வரி செலுத்தாத சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 13 ஆயிரத்து 300 வெளிநாட்டு சிகரட்டுக்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சிகர்ட் தொகையுடன் அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். ஒரு தொகை சட்டவிரோத சிகரட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஹொட்டல் ஒன்றிலிருந்து குறித்த சிகரட் தொகையுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தீர்வை வரி செலுத்தாத சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 13 ஆயிரத்து 300 வெளிநாட்டு சிகரட்டுக்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சிகர்ட் தொகையுடன் அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.