இன்று மின்சாரம் தடைப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தனியார் துறையின் மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்படக்கூடும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டுள்ள குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளதால் மின் தடை ஏற்படாது என மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.