சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கமைவாக இணைத்துக்கொள்ளப்பட்ட 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து 51 ஆயிரம் பட்டதாரிகள் பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். கட்சி பேதமின்றி இனைத்துக்கொள்ளப்பட்ட இந்த பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
இதற்கமைவாக வடமேல் மாகாணத்தில் 3640 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. வடமேல் மாகாணத்தின் ஆளுநர் எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயரத்ஹேரத் , குணபால ரத்னசேகர ஆகியோர் இணைந்திருந்தனர்.