நேற்றைய தினம் 623 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 72ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 5 இலட்சத்து 67 ஆயிரத்து 360 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 563 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட 15 கொவிட் மரணங்கள் தொடர்பான அறிவிப்பு நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலின் பின்னர் வெளியிடப்பட்டது. உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 30 முதல் 59 வயதுக்கிடைப்பட்ட 7 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 8 பேரும் அடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரண எண்ணிக்கை 15 ஆயிரத்து 149 ஆக உயர்வடைந்துள்ளது.