நாட்டின் சில பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள தனியார் பிரிவுக்கு சொந்தமான மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாரே இதற்கு காரணமென மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இன்று மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாரை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.