தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் கீழ் ஏதேனும் ஒரு வகை தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 இலட்சத்து 7724 ஆகும். இரண்டாவது டோசை பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 38 இலட்சத்து 59 ஆயிரத்து 887 ஆகும. 43 இலட்சத்து 19 ஆயிரத்து 348 பேர் 3 வது டோசை பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 12 தொடக்கம் 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும் குறித்த வயதுக்கு இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிக குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.