சீனாவின் பீஜிங்கிற்கு அருகிலுள்ள துறைமுக நகரமான தியாங்ஜினில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபுடைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த நகரிலுள்ள சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் பேரை கொரோனா பரிசோதனைக்குட்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையிலேயே கொவிட் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது. இதுவரை 4 மாவட்டங்களில் முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 12 மாவட்டங்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக சீனா குறிப்பிட்டுள்ளது.