நேற்றைய தினம் 588 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
Related Articles
நாட்டில் நேற்றைய தினம் 588 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 90 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 5 ஆயிரத்து 203 பேர் பூரண குமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 5 இலட்சத்து 66 ஆயிரத்து 760 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதேவளை நேற்றைய தினம் மேலும் 16 கொவிட் மரணங்கள் பட்டியலிடப்பட்டன. அதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.