கொட்டதெனியாவ பிரதேசத்தில் காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கமைய அவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும், எதிர்வரும் திங்கட்கிழமை அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாயின் தாக்குதல் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய இரு சிறுவர்களும், மீரிகம பகுதியிலுள்ள வர்த்தகநிலையமொன்றின் உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டு அண்மையில் மீரிகம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.