ஊடகவியலாளர்களுக்கென பூஸ்டர் டோசை வழங்கும் வேலைத்திட்டம் ஊடக அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஆரம்பமானது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர்களுடன் இணைந்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். ஊடகவியலாளர்கள் எதிர்வரும் தினங்களில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய நிகழ்வில் ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்தியர் இரத்னசிரி ஹேவகே ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்