மலேஷிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பெயரிடப்பட்டுள்ளது..
Related Articles
20 – டுவண்டி பொதுநலவாய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிக்காண் சுற்றில் இலங்கை மகளிர் அணி விளையாடவுள்ளது. இதற்கமைய ச்சமரி அத்துபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி பெயரிடப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்கென நாளை மறுதினம் இலங்கை மகளிர் அணி மலேஷியாவிற்கு பயணிக்கவுள்ளது. குறித்த தகுதிக்காண் சுற்று எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் ஸ்கொட்லாந்து, கென்யா, மலேஷியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகளை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.