இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணம் பதிவு..
Related Articles
இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் ஒமிக்ரோன் தொற்றினால் மரணித்துள்ளார். குறித்த தகவலை இந்திய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. உயிரிழந்த நபர் நீரிழிவு உட்பட நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் மொத்தமாக 90 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் அந்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 325 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.