நாட்டில் நேற்றைய தினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 365 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த எண்ணிக்கையுடன் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 88 ஆயிரத்து 300 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றிலிருந்து 5 இலட்சத்து 61 ஆயிரத்து 128 பேர் குணமடைந்துள்ளனர். 12 ஆயிரத்து 135 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு 18 கொரோனா மரணங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளதென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.