fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீதி கட்டமைப்பில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட வருடமாக 2022ம் ஆண்டு அமையும் : நீதியமைச்சர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2022 18:42

நீதி கட்டமைப்பில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட வருடமாக 2022ம் ஆண்டு அமையும் : நீதியமைச்சர்

2022ம் ஆண்டு என்பது இலங்கை வரலாற்றில் நீதிமன்ற கட்டமைப்பில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய வருடமாக அமையுமென நீதியமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல்மயப்படுத்தப்படுமெனவும் சுமார் 60 சட்டமூலங்களை கொண்டு வருவது தொடர்பான வரைபுகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 சட்டமூலங்கள் இவ்வருடத்தில் அமுல்படுத்தப்படுமெனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறு 40 சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால், சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மாற்றமடையுமெனவும் அதனூடாக நாட்டின் ஜனநாயக வழிமுறைகளுக்கான செயற்ப்பாட்டில் மாற்றம் உருவாகுமெனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள மக்களுக்கு பின்னால் செல்ல வேண்டும் பிரதானிகளுக்கு பின்னால் அல்ல என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னர் முழு உலக நாடுகளினாலும் நிராகரிக்கப்பட்ட நாடு. எனினும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அவர்கள் கொள்கை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு ஜப்பான் முன்னேறியுள்ளதாகவும் இன்று உலகிலுள்ள நல்ல மனிதர்கள் உள்ள நாடாக ஜப்பான் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் அலி ஷப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நாம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டு பிரஜைகள் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள விடயங்களில் தலையிடாமல் இன்று செய்த வேலைகளை விட நாளைய தினத்தில் சிறப்பாக எவ்வாறு வேலைகளை செய்வதென்பது சிந்திக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுடன் ஒப்பிடாமலும் போட்டியிடாமலும் அவர்களுக்கு எதிரான குரோதங்களை ஏற்படுத்திக்கொள்ளாமலும் செயற்பட வேண்டும். அதுவே சகல மதங்களிலும் எடுத்துக்காட்டாக உள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2022 18:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க