fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருநாகல் வரையான பகுதி எதிர்வரும் 15ம் திகதி அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2021 18:39

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயிலிருந்து குருநாகல் வரையான பகுதி எதிர்வரும் 15 ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2 ம் கட்டமான இப்பகுதி 40 கிலோமீற்றர் தூரம் கொண்டதாகும். சுற்றாடல் மற்றும் சமூக பாதிப்புக்களை குறைக்கும் வகையில் நகர்பிரதேசங்களை விட்டு குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

4 மருங்குகளைக் கொண்ட குறித்த வீதி இலங்கையில் அமைக்கப்பட்ட மிகவும் வனப்பான அதிவேக வீதிப்பகுதியாக கருதப்படுகிறது. மீரிகம, நாக்கலகமுவ, தம்பொக்க குருநாகல் மற்றும் எக்கபிட்டிய ஆகிய நிலையங்களில் பணம் செலுத்தும் கருமபீடம் உள்ளடங்கலாக 5 இடைமாற்றல் மத்திய நிலையங்களோடு இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென 137 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தேசிய நிதியைப் பயன்படுத்தி தேசிய ஒப்பந்தக் காரர்கள் ஊடாக இவை நிர்மாணிக்கப்பட்டதாக அமைச்சர் ஜோன்ஷ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2021 18:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க