நீர்கொழும்பு நகரிலுள்ள ஒசுசல ஒன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது 2 ஆயிரத்து 110 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனுமதிப்பத்திரமின்றி மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த நபரொருவர் அம்பலன்தொட்டை நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 57 வயதான குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதன்போது அவரிடமிருந்து ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 16 ஆயிரத்து 764 கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.