போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையினால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்கள் மத்தியில் ஆர்வமின்மை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு சில அமைப்புக்கள் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் போலி பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். அதன் காரணமாக பெரும்பாலானோர் பூஸ்டர் தடுப்பூசியை நிராகரிப்பதாக வைத்தியர்கள் சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இவ்வாறான நிலை தொடரும்பட்சத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் கொவிட் வைரஸ் பரவல் இன்னும் நிறைவடையவில்லையெனவும் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் எதிர்வரும் ஜனவரி மாத நிறைவில் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.