வவுனியா யுவதி ஒருவரின் கொலையுன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது..
Related Articles
வவுனியாவை உலுக்கிய யுவதி ஒருவரின் கொலையுன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்ய முயற்சித்த சந்தர்ப்பத்தில் சந்கேத நபர் விஷமருந்தி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 15 ம் திகதி வவுனியா நெடுங்கேணி கிராமத்தில் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் நெடுங்கேணி வனப்பகுதிக்குள் தப்பிச்சென்றார். பின்னர் அவரைக் கைதுசெய்ய வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவு விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்திருந்தது. அதற்கமைய கைவிடப்பட்ட சிறிய குடிலொன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இதன்போது அவர் விஷமருந்தி இருந்ததாக தெரியவந்தது. அவர் கைதுசெய்யப்பட்ட இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, இரு கத்திகள் மிருக வேட்டைக்கு பயன்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்தபோதும் பிரதேசவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணமான குறித்த நபர் உயிரிழந்த யுவதியுடன் காதல் தொடர்பை பேணி வந்ததாக தெரியவந்துள்ளது. இந்நபர் இதற்கு முன்னரும் பெண்ணொருவரை கொலை செய்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.