இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்டவும் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.