நாட்டில் நேற்றைய தினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக 524 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கொவிட் தொற்றிலிருந்து 295 பேர் குணமடைந்துள்ளதாகவும், அதனடிப்படையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 57 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் 19 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த எண்ணிகையுடன் நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 771 ஆக உயர்வடைந்துள்ளதென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபர தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.