மட்டக்களப்பில் வீடொன்றில் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மோதர வீதி பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
27 வயதுடைய பெண்ணும் அவரது 49 வயதுடைய தந்தையும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் இருந்து தப்பிச் சென்ற போது அயலவர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்போது கொலையுண்ட பெண்ணின் கணவர் மற்றும் மகளும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. திருடப்பட்ட தங்க நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் கொலை இடம்பெற்ற இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.