மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் மோசடி விசாரணை பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 19 மற்றும் 43 வயதிற்கிடைப்பட்ட சிலாபம் மற்றும் வாரியபொல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனிடையே மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவினர் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மிரிஹான பகுதியில் கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள், கையடக்கத்தொலைப்பேசி மற்றும் பணம் என்பவற்றை 26 வயது இளைஞன் ஒருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளார். பொலிஸ் விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலும் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.