வவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகியதில் 4 வயதான குழந்தை பலியாகியுள்ளது. குழந்தை தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போதே தவறுதலாக கயிறு கழுத்தில் இறுகியுள்ளது. எனினும் உடனடியாக செயற்பட்ட உறவினர்கள் குழந்தையை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி 4 வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கியதில் 4 வயது சிறுமி பலி..
படிக்க 0 நிமிடங்கள்