தெமட்டகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆராமய வீதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்போது 2 கிலோ 25 கிராம் கேரள கஞ்சாவுடன், 30 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெமட்டகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆராமய வீதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்