இலங்கையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல நிற மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதில் சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் அதிக போட்டி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்கக்கல்லை இணைய வழியில் இடம்பெறும் சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வொசிங்டனிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக 310 கிலோ கிராம் எடைக்கொண்ட குறித்த நீல நிற மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா ஆர்வம் செலுத்தியுள்ளது. சீனா ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் அது தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீல மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதில் சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போட்டி..
படிக்க 0 நிமிடங்கள்