fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிளிநொச்சியில் இலட்சக்கணக்கான துப்பாக்கி ரவைகள் 3வது நாளாகவும் மீட்பு..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2021 12:26

கிளிநொச்சி கோரக்கண்கட்டு பகுதியில் இன்றைய தினமும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேலும் ரீ-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு இலட்சத்து 4 ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கோரக்கண்கட்டு பகுதியில் 3வது நாளாக இன்றைய தினமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தனியார் காணி ஒன்றில் நிர்மான பணிகளை மேற்கொள்வதற்கென நிலத்தை தயார்ப்படுத்தும் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.

கடந்த 14ம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற அனுமதிக்கமைய அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி அரவியநகர் விசேட அதிரடிப்படையினரின் தலைமையில் குறித்த பணிகள் முன்னெடுக்க்படுகின்றன.

ரீ-56 ரக துப்பாக்கிக்கு பயனப்படும் தலா 750 ரவைகளை கொண்ட 86 பெட்டிகள் அங்கிருந்து கண்ணெடுக்கப்பட்டன. அத்துடன் பெட்டிகளில் இல்லாத மேலும் 21 ஆயிரம் துப்பாக்கி ரவைகளும் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எல்ரீரீஈயினால் இந்த பகுதியில் ஆயுத கிடங்கொன்று முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2021 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க