கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவடைகின்றமையினால் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் பணி சகல சுகாதார வை
த்திய அதிகாரி அலுவலக மற்றும் விசேட தடுப்பூசி மத்திய நிலையங்களில் இடம்பெறுகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.