புதிதாக சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளன. எரிவாயு வெடிப்புடன் தொடர்புடைய ஒவ்வொரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக பரிசோதனைகளை மேற்கொண்டு துரிதமாக தகவல்கள் சேகரிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பொலகே தெரிவித்தார். இதேவேளை குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய கேஸ் வெடிக்கின்றமை தொடர்பான அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்..
படிக்க 0 நிமிடங்கள்