ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் திரிபினை 2 டோஸ் தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாதென பிரித்தானியா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. எஸ்ட்ராஷெனேகா மற்றும் பைசர் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு புதிய திரிபினால் பாதிப்பு ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய மூன்றாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் 75 வீதமேனும் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனைவருக்கும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.