நுவரெலியாவில் கேபள் கார் செயற்திட்டத்தை நறைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயமாக இது அமைந்துள்ளது. சுவிற்சர்லாந்து முதலீட்டாளருடன் இணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. நானு ஓயா ரயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள க்ரகரி வாவி வரை கேபள் கார் சேவை நடத்தப்படும். 18 மாதங்களுக்குள் வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கேபள் கார் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் கேபள் கார் செயற்திட்டம்.. 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய தீர்மானம்..
படிக்க 0 நிமிடங்கள்