வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை சட்டரீதியான முறையில் இலங்கைக்கு அனுப்புமாறு மத்திவங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தவறான வழியில் பணத்தை அனுப்பவேண்டாம். சரியான வழியில் பணத்தை நாட்டுக்கு அனுப்புவதற்காக வழிகளை நாம் அமைத்துக்கொடுத்துள்ளோம். அந்த வழிகள் ஊடாக நாட்டுக்கு பணம் வந்து சேர்வதை உறுதிப்படுத்துங்கள். அனைவரிடமும் நான் இதனை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன். யுத்தகாலத்தில் டீ.ஆர.ஓ கணக்குளை நாம் தகனம் செய்தோம். அதன் ஊடாக சரியான வழியில் பணம் வந்து சேர்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றும் அந்த சட்டங்கள் உள்ளன. அந்த சட்டதிட்டங்களை பயன்படுத்தி சட்டவிரோதமான வழியில் பணம் வந்து சேர்வதை தடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.