பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார ஏராளமானோரில் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் இன்று அனைவருக்கும் விடை கொடுத்தார்.
பாகிஸ்தான் சியல்கோட் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த பிரியந்த குமார அந்நாட்டு சமய தீவிரவாதிகளினால் கடந்த 3 ம் திகதி படுகொலை செய்யப்பட்டார். தொழிற்சாலையில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த சமயம் சார்ந்த சுவரொட்டியொன்றை அகற்றியமையே இப்படுகொலைக்கான காரணமென கூறப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பான தெளிவான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை.
அவரது பூதவுடல் நேற்றுமுன்தினம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது. விசாரணைகளைத் தொடர்ந்து பூதவுடல் கனேமுல்ல கெந்தவியத்த பாலுவ பகுதியிலுள்ள அவரது இல்லத்திற்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. 2 பிள்ளைகளின் தந்தையான பிரியந்த குமாரவின் பூதவுடலுக்கு பெரும் எண்ணிக்கையிலானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கனேமுல்ல பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. இந்த மிலேச்சத்தனமான படுகொலையை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கண்டு கவலையடைந்த உலகம் முழுவதும் வாழும் பெரும் எண்ணிக்கையிலானோரின் கண்கள் கசிந்தன.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/dpeBamakqMY”]