நேற்றைய தினத்தில் நாட்டில் புதிய கொவிட் தொற்றாளர்களாக 748 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 69 ஆயிரத்து 171 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 5 இலட்சத்து 43 ஆயிரத்து 111 பேர் நேற்றைய தினம் வரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபர தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 505 ஆக உயர்வடைந்துள்ளது.