ராஜகிரிய பகுதியில் 2016ம் ஆண்டு வாகன விபத்தொன்றை ஏற்படுத்தி இளைஞர் ஒருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை எதிர்ப்பை ஆட்சேபித்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
2016 ம் ஆண்டு பெப்பரவரி 28 ம் திகதி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க கவனயீனமாக ஜீப் வண்டியொன்றை செலுத்தி வழக்கின் முறைப்பாட்டாளரான இளைஞரை விபத்துக்குள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு அடிப்படை ஆட்சேபனை மனுவொன்றை தாக்கல் செய்தார். அந்த ஆட்சேபனையை நிராகரித்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த உத்தரவிட்டார்.
உத்தரவை அறிவித்த நீதியரசர் நீதிமன்றத்தை தவறான வழியில் இட்டுச்சென்றுள்ளது தெரியவரும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளருக்கு முடியுமென தெரிவித்தார். அவ்வாறான வழக்கொன்றை விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு தடையில்லையென்றும் சுட்டிக்காட்டிய நீதியரசர் இதன் அடிப்படையில் பிரதிவாதியின் அடிப்படை ஆட்சேபனையை நிராகரிப்பதாக குறிப்பிட்டார். பிரதிவாதியின் அடிப்படை ஆட்சேபனையை நிராகரிக்குமாறு கோரி முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப்பபீரிஸ் இந்த வழக்கின் தன்மை தொடர்பாக விபரித்தார். விபத்துக்குள்ளான இளைஞனின் தந்தை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். சாட்சியாளரிடமிருந்து குறுக்கு விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் ஜனவரி 11 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.