சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மருதானை பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது குறித்த சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வரிப்பணத்தை செலுத்தாமல் எடுத்துவரப்பட்ட சுமார் 9 ஆயிரம் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதெனவும், அவற்றுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவரென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களுடன் சந்தேக நபர் இன்றைய தினம் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.