ஒமிக்ரோன் புதிய வைரஸ் திரிபு நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கான உச்சக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு விமான நிலையங்களிலும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளன. ஒமிக்ரோன் வைரஸ் திரிபிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பொதுமக்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறும் பட்சத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்புக்கு முகங்கொடுக்க நேரடிலாமென சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் தடுப்பூசிகளை உரிய முறையில் பெற்றிருத்தல் மற்றும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுதல் போன்ற செயற்பாடுகளினால் வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.