பேஸ்புக்கில் காணப்பட்ட சுமார் 500 போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து அவை செயற்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி கொரோனா தொற்றுப்பரவலின் ஆரம்பம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. குறித்த கணக்குகள் சுவிட்ஷர்லாந்து நாட்டை சேர்ந்த உயிரியலாளர் வில்ஷன் எட்வேட்ஸ் என்பவரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை போலி பேஸ்புக் கணக்குகளின் உள்ளடக்கங்கள் சீன ஊடகங்கள் மூலம் பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.