புதிய சுகாதார விதிமுறைகள் இன்று முதல் அமுலாகின்றன. இன்று முதல் அமுல்ப்படுத்தப்படுகின்ற புதிய சுகாதார விதிமுறைகளுக்கமைய மிக முக்கிய விடயங்களுக்காகவன்றி மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற கூடாது. ஊழியர் படையில் மூன்றில் ஒன்று கொள்ளளவுடன் அலுவலகங்கள் நடாத்திச்செல்லப்பட வேண்டும். பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டியில் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் இருக்க வேண்டும். பூரண அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் பல்வேறு நிகழ்வுகள் மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.
பார், சலூன் மற்றும் தையல் நிலைய கொடுக்கல் – வாங்கல்கள் ஏற்கனவே ஒதுக்கிக்கொண்ட நேரங்களுக்கமைய திறந்துவைக்க அனுமதி கிடைக்கின்றது. முன்பள்ளி பாடசாலைகளையும் பகல் பராமரிப்பு மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி கிடைப்பதுடன் , கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கமைய பாடசாலைகளை நடாத்தி செல்லவும் முடியும்.
நிதி நிறுவனங்கள் திறக்கப்படுவதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய உயர் கல்வி நிறுவனங்களையும் நடாத்தி செல்ல முடியும். திரையறங்குகளையும் 75 சதவீத கொள்ளளவுடன் திறக்க முடியும்.
இறுதிக் கிரியைகளில் உயர்ந்த பட்சம் 20 பேர் பங்கேற்கலாம். திருமண நிகழ்வுகளின் போது மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கினர் மற்றும் 200 பேருக்கும் அதிகரிக்காத அளவு நிகழ்வுகளை நடத்த வேண்டும். அதேபோல் திறந்த வெளிகளில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் உயர்ந்த பட்சம் 250 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும். சகல திருமண உற்சவ நிகழ்வுகளிலும் மதுபா பாவனைக்கு தடை விதிக்கப்படுகின்றது.
மத ஸ்தளங்களில் கூட்டமாக இல்லாமல் சமுக இடைவெளியுடன் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். மேலதிக வகுப்புகள் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளுக்காக மாத்திரம் நூற்றுக்கு 50 வீத கொள்ளளவில் நடத்த முடியுமென புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.