சஹ்ரான் ஹாசிமின் மனைவி மீதான விசாரணை டிசம்பர் 8 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏப்ரல் 26 ம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. குறித்த சம்பவத்தில் உயிர்தப்பிய சஹ்ரான் ஹாசிமின் மனைவி ஆஜராகமையினால் குறித்த வழக்கை டிசம்பர் 8 ம் திகதி வரை ஒத்திவைப்பதாக கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதின் உத்தரவிட்டார்.