2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யொவுன்புர வேலைத்திட்டத்திற்கென மதிப்பிடப்பட்ட 350 மில்லியன் ரூபாவிற்கும் மேலதிமாக, 8 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது. 2 களஞ்சியசாலைகளுக்கு 22 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் வேலைத்திட்டம் இடம்பெற்ற தினத்திற்கு பின்னர் டி ஷர்ட்டுக்கென 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளமை குறித்து கோப் குழு கவனம் செலுத்தியுள்ளது. கோப் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ச்சரித்த ஹேரத் தலைமையில் கூடியது.
2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் யொவுன்புர வேலைத்திட்டத்திற்கென அனுமதி பெறப்பட்ட மதீப்பீட்டு தொகை 350 மில்லியன் ரூபாவாகும். எனினும் அதற்கு மேலதிகமாக 8 கோடியே 50 இலட்சத்து 60 ஆயிரத்து 914 ரூபா செலவிடப்பட்டுள்ளமை கோப் குழுவில் தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டு வேலைத்திட்டத்திற்கு 2 களஞ்சியசாலைகளை வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் போது கொள்முதல் செயன்முறைக்கு வெளியில் பதிவு செய்யப்பட்ட தினத்திற்கு மேலதிகமாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து 22 இலட்சத்து 27 ஆயிரத்து 400 ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு யொவுன்புர வேலைத்திட்டத்தில் பங்கேற்ற இளைஞர், யுவதிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கென தொழில்நுட்பக்குழுவின் பரிந்துரையின்றி நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்ற தினத்திற்கு பின்னர் ஆயிரத்து 773 டி ஷர்ட்டுக்களுக்கென 19 இலட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறித்து கோப் குழு கவனம் செலுத்தியுள்ளது. பொறுப்பை புறந்தள்ளி ஒழுக்கமற்ற விதத்தில் சட்டவிரோதமாக செயற்படும் அதி;காரிகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராத விஜயகோனுக்கு, கோப்குழு தலைவர் இதன்போது அறிவித்தார்.