நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 27ம் திகதி முதல் இதுவரை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது. 62 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 18 வீடுகள் முழுமையாக சீரற்ற காலநிலையினால் சேதமடைந்துள்ளதோடு, 960 வீடுகளில் பகுதியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியான மழை கொண்ட காலநிலையினால் நீரேந்தும் பகுதிகளிலுள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதோடு, ஆறுகளின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்திரனபுரி லேவல்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபுகஸ்தென்ன உடநுகேபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வேளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாவும், சுமார் 100 வரையான பகுதி மண்சரிவுக்கு உட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகள், சொத்துக்கள் அல்லது உயிர் ஆபத்துக்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பகுதியை அண்மித்த தாழ்நிலப்பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.